“சென்னையில் தந்தையைக் காணவில்லை.. இ-பாஸ் வேண்டும்” - உதவி கோரும் பெங்களூரு இளைஞர்..!

A-Youngster-need-help-for-E-pass-from-Bengalore-to-Chennai

சென்னையில் தனது தந்தையைக் காணவில்லை என்றும், பெங்களூரில் உள்ள தனக்கு இ-பாஸ் கிடைக்க உதவுமாறும் இளைஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement

சென்னையைச் சேர்ந்த இளைஞரான கார்த்திக் நாராயணன் என்பவர் புதிய தலைமுறை தொலைக்காட்சி ட்விட்டர் பக்கம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் சென்னையில் தனியாக வசிக்கும் 63 வயதான தனது தந்தை நேற்று முன்தினம் மாலை முதல் தனது அழைப்பை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று காலை தந்தைக்கு உணவு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ததாகவும், ஆனால் டெலிவரி செய்யும் நபரின் போனையும் தனது தந்தை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது நண்பரிடம் கூறி, தனது வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு தெரித்ததாகவும், அங்குத் தனது தந்தையின் போன் மட்டுமே இருந்ததாக நண்பர் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தனது தந்தை காணாமல் போனதாக உறுதி செய்துகொண்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை எனக் கூறியுள்ளார்.

அத்துடன் பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் பெற விண்ணப்பித்ததாகவும், ஆனால் தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனக்கு யாரேனும் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement