புதுச்சேரியில் என்னென்ன தளர்வுகள்..? இன்று மாலை அறிவிப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் தளர்வுகளுக்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் முழு கடை அடைப்பு ...


Advertisement

இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் என்னென்ன தளர்வுகளை வழங்கலாம் என்பது குறித்து இன்று மாலை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடி ஆலோசிக்க உள்ளது. அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க நீட்டிப்பு குறித்த அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement