வெப்சீரிஸூக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய
அவர், ‘காட்மேன்’ வெப்சீரிஸின் வசனம் கண்டிக்கத்தக்கது என்றும், வெப்சீரிஸூக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும்,
' கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை பாரதம் திட்டம் வெற்றி கண்டுள்ளது. மோடி சக்தி வாய்ந்த தலைவர். கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்திற்கு உலக நாடுகள் பாராட்டுகள் தெரிவித்துள்ளன.பாஜக சார்பில் தமிழகத்தில் 40 லட்சம் முகக் கவசங்கள் கொடுத்துள்ளோம். வழிபாட்டு தலங்களை தமிழகத்தில் திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். கட்சித்தலைவர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொடர்பான சிகிச்சை செலவை குறைத்து வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இறக்குமதியாகும் இயந்திரங்கள்!!
Loading More post
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்