JUST IN

Advertisement

செங்கல்பட்டில் இன்று 94 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 94 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.


Advertisement

image

செங்கல்பட்டு - 94, கடலூர் - 5, கள்ளக்குறிச்சி - 2, காஞ்சிபுரம் - 22, கன்னியாகுமரி - 4, கரூர் - 1, கிருஷ்ணகிரி - 1, மதுரை - 10, நாகை - 5, பெரம்பலூர் - 1, ராமநாதபுரம் - 13, சேலம் - 37, சிவகங்கை - 1, தென்காசி - 1, தஞ்சை - 2, தேனி - 1, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 28, திருவண்ணாமலை - 9, திருவாரூர் - 4, தூத்துக்குடி - 17, நெல்லை - 7, திருச்சி - 5, விழுப்புரம் - 2, விருதுநகர் - 1 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இதுதவிர ரயில்வே தனிமை வார்டில் இருந்த 40 மற்றும் உள்நாட்டு விமான நிலைய தனிமை வார்டில் இருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் புகார்: 24 நேரத்தில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நடவடிக்கை

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 12,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 9,021 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 160 பேர் பலியாகியுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement