[X] Close >

“கொரோனா மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்புநிலை திரும்பும்” - கங்குலி

Sourav-Ganguly-Says-BCCI--ICC--Will-Be-Hell-Bent--To-Get-Cricket-Back-To-Normal

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா வைரசால் உலக முழுவதும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டுகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்டும் அடக்கம். இந்நிலையில் கிரிக்கெட் உலகில் எப்போது இயல்புநிலை திரும்பும் எனச் செயலி ஒன்றின் மூலம் பயிற்சியில் வகுப்பில் பங்கேற்ற கங்குலி தெரிவித்துள்ளார்.

image


Advertisement

அவர் கூறும்போது, “இந்த கொரோனா வைரஸ் திடீரென உலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். நம்மிடம் இந்த வைரசுக்கு மருந்து எதுவும் இல்லை. ஆனால் 6 அல்லது 7 மாதங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்றார்.

வாட்ஸ் அப்பில் புகார்: 24 நேரத்தில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நடவடிக்கை

அத்துடன், “நம்மிடையே இந்தப் பெரும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது. இருப்பினும் கிரிக்கெட் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும். ஆனால் கிரிக்கெட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு நரக வேதனை தான். மருந்து கண்டுபிடித்த பின்னர் தான் கிரிக்கெட்டில் இயல்பு நிலை வரும்” என்று தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close