சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா உறுதி

Coronavirus-has-confirmed-616-people-in-Chennai-today
 
 
சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது.  
 
Image
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,000 உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் அளவு 56.64 சதவிகிதமாகப் பதிவாகி உள்ளது.  மேலும் கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 160 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இதுவரை உயிரிழந்தவர்களின் இறப்பு சதவிகிதம்   0.76 ஆகப் பதிவாகியுள்ளது  
 
Image
 
சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது.   
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement