”ராகுல் காந்திக்கு புரிதல் குறைவு” - பாஜக தலைவர் நட்டா தாக்கு

”ராகுல் காந்திக்கு புரிதல் குறைவு” - பாஜக தலைவர் நட்டா தாக்கு
”ராகுல் காந்திக்கு புரிதல் குறைவு” - பாஜக தலைவர் நட்டா தாக்கு

கொரோனா விவகாரத்தில் ராகுல் காந்திக்குக் குறைந்த அளவிலான புரிதல் மட்டுமே இருப்பதாகப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் பொது முடக்கம் தோல்வி அடைந்து விட்டது என்றும் இந்திய- சீன எல்லையில் நடப்பதை அரசு வெளிப்படையாக நாட்டு மக்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜே.பி. நட்டா அரசின் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார்.

அவர் கூறும் போது “ராகுல் காந்திக்கு கொரோனா விவகாரத்தில் குறைந்த அளவிலான புரிதல் மட்டுமே இருக்கிறது. கொரோனா குறித்து அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் முழுக்க அரசியல் செய்யும் நோக்கத்தில் மட்டுமே இருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் மோடி அவர்களின் ஆட்சியில் பல தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரையில் அனைத்து நடவடிக்கைகளும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது. அதனால்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. இன்றும் கூட பல வல்லரசு நாடுகள் கொரோனாவை கையாள முடியாமல் திணறி வருகின்றன.

முன்னதாக ராகுல் காந்தி, “ஏன் பொதுமுடக்கதை ஏன் நீட்டிக்க வில்லை” என்கிறார். மீண்டும் ஊரடங்கு குறித்த கேள்விகளை முன்வைக்கிறார். அவரது இந்தக் குழப்பமான கேள்விகள் அவருக்கு கொரோனா விவகாரத்தில் ஆழ்ந்த புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது” என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com