JUST IN

Advertisement

உயிரிழந்த பெண் செவிலியர் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
உயிரிழந்த பெண் தலைமை செவிலியர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
 
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் செவிலியர்களுக்கான பணி நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவனித்து வந்தவர்.  
 
Image
 
இதனைத்தொடர்ந்து இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே 3-ஆம் தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 
 
இதனிடையே கடந்த 28 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக செய்தி வெளியானது. கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல், தலைமைப் பெண் செவிலியர் இவராவார். ஆகவே இவரது மரணம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் எதிரொலித்தன.
 
Image
 
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையில் பேருந்து, ரயில் இயக்கக்கூடாது என முதல்வரிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்ததாகச் செய்தி வெளியானது. இந்த ஆலோசனைக்குப் பின் உயிரிழந்த பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement