JUST IN

Advertisement

 “சென்னையில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை” - மருத்துவக் குழு விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
சென்னையில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
 
Image
 
தமிழக முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவின் சார்பில் ஐ.சி.எம்.ஆரின் துணை இயக்குநரும் மூத்த விஞ்ஞானியான பிரதீர் கவுர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 
Image
 
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் இருப்பதால் நகரப்பகுதியில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கை உயர்த்த வேண்டும். எண்ணிக்கையை உயர்த்தினால்தான் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும். எனவே தொற்று அதிகரிப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
 
Image
 
மேலும் தொடர்ந்து பேசிய மருத்துவ நிபுணர் குழுவினர், “சென்னையில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை”என்று தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டதாகச் சிலர் கருத்து கூறி வரும் நிலையில் மருத்துவக் குழுவின் இந்தக் கருத்து ஆறுதலாக அமைந்துள்ளது. 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement