மும்பையில் பீர் தர மறுத்ததற்காக நண்பனை கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை ஜோகேஷ்வரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் டிராவிட்(29). இவரும் இவரது சகோதரன் விஜயும் பீர் ஆர்டர் செய்து குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நண்பரான அதேப்பகுதியைச் சேர்ந்த சோனு என்ற சண்முக ராஜேந்திரன் என்பவர் அவர்களிடம் பீர் கேட்டுள்ளார்.
குறைவான அளவு மட்டுமே இருப்பதாக கூறி அஜய் பீர் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆகியுள்ளது. இதைப்பார்த்த அஜய்யின் சகோதரர் இருவரையும் விலக்க முற்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சண்முக ராஜேந்திரன் அங்கிருந்த ஐஸ் எடுக்க பயன்படும் முள்போன்ற கத்தியை எடுத்து இருவரையும் குத்தினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு மற்ற நண்பர்கள் ஓடிவருவதை கண்ட சோனு அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதையடுத்து படுகாயமடைந்த சகோதரர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி அஜய் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜய் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சோனுவை கைது செய்தனர். அவர்மேல் இந்தியன் பீனல் கோட் கொலை , கொலைமுயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி