நாளை காலை பிரதமரை சந்திக்கும் அதிமுக எம்பிக்கள்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை அதிமுக எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement