JUST IN

Advertisement

பெரிய நடிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிடுமா ஒடிடி? - திரை விமர்சகர் கருத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர்கள் குறித்த விவாதங்களையும், பட விளம்பரங்களையும் பெரும்பாலும் அவர்கள் அதற்காக நியமித்திருக்கும் கூலிப்படைகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன என திரைத்துறை விமர்சகரான பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வேண்டிய பெரிய நடிகர்களின் படங்கள் உட்படப் பல சின்ன பட்ஜெட் படங்கள் அனைத்தும் வெளியாக முடியாமல் கிடப்பில் கிடக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில்தான் அண்மையில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஒடிடி இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா அறிவித்தார். இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தாலும் கலைப்புலி தாணு உள்ளிட்ட ஒரு சில தயாரிப்பாளர்கள் ஆதரவு அளித்தனர்.


Advertisement

image

ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட சூர்யா “பொன்மகள் வந்தாள்” படமானது மே 29 ஆம் தேதி ஒடிடியில் வெளியாகும் என அறிவித்தார். அதன் படி இன்று பொன்மகள் வந்தாள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும், பொன்மகள் வந்தாள் சொன்னபடி ஒடிடியில் வெளியானதும், படம் வெளியாவதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பும் தமிழ் திரைத்துறையின் எதிர்காலம் இனி ஒடிடிதானோ, பெரிய நடிகர்களின் கவனம் இனி ஒடிடி பக்கம் திரும்பி விடுமோ, அப்படியானால் திரையரங்குகளின் நிலை என்னவாகும் உள்ளிட்ட பல கேள்விகள் எழும்பியுள்ளது.


Advertisement

ஆகவே இது தொடர்பான விளக்கங்களைத் தெரிந்துகொள்ளப் திரைத்துறை விமர்சகரும் பத்திரிகையாளருமான பிஸ்மியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

 

பொன்மகள் வந்தாள் படம் வெளியாவதற்கு முன்னர் அப்படத்திற்கு சமூக வலைத் தளத்தில் கிடைத்த வரவேற்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

முதலில் நான் அதை மக்களின் வரவேற்பாகப் பார்க்கவில்லை. காரணம் முன்பு என்னவோ சமூக வலைத்தளங்கள் மக்களின் ஊடகமாக இருந்தது உண்மைதான். ஆனால் சமீப காலமாக அப்படியில்லை. இன்று ரசிகர்கள் வாய்பிளந்து பார்த்துக் கொண்டு இருக்கும் பெரிய நடிகர்களே சமூக ஊடகங்களில் தங்களின் இமேஜை தக்கவைத்துக்கொள்ளவும், தங்கள் படங்கள் குறித்த விவாதங்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கவும் தனிக் குழுவை நியமித்துள்ளார்கள். அவர்கள்தான் இன்று சமூக வலைத்தளங்களில் நடிகர்களுக்கான பெருவாரியான வேலையைச் செய்கிறார்கள். ஆகவே இதனை முழுக்க முழுக்க மக்களின் வரவேற்பாகக் கருத முடியாது.

image

“பொன்மகள் வந்தாள்” படம் ஒடிடியில் வெளியானது, தமிழ் திரைத்துறையில் இனி அதிகமான சின்ன பட்ஜெட் படங்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை
உருவாக்குமா?

நிச்சயமாக இல்லை. காரணம் ஒடிடி நிறுவனர்கள் இங்குச் சேவை செய்வதற்காக வரவில்லை. அவர்களும் கணிசமான இலாபத்தைப் பெறவே இங்கு வந்திருக்கிறார்கள். அதற்கான முயற்சிதான் இன்று இந்தப் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தை இவர்கள் ஒரு குறிப்பிட்ட விலைகொடுத்து வாங்கியுள்ளார்கள். இதற்காக இன்று வெளியான அனைத்து நாளிதழ்களிலும் முழுப் பக்கம் விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.

image

இதற்கு முன்னர் எந்தச் சிறிய பட்ஜெட் படத்திற்கு இவர்கள் இவ்வாறு செய்தனர். திரையரங்குகளில் ஓடிய சிறிய பட்ஜெட் படங்களை அவர்கள் இன்று வரை இலவசமாக மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். அதைத் தனது தளத்தில் பதிவிடும் அவர்கள் அதில் கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சொற்பமான வருமானத்தையே தயாரிப்பாளர்களுக்கு வழங்குகிறார்கள். ஆகவே இது போன்ற தளங்கள் சின்ன பட்ஜெட் படங்களை நிச்சயமாக வாழ வைக்காது என்பதே இங்கு மறைக்கப்பட்டிருக்கும் உண்மை.

சூர்யா போன்ற பெரிய நடிகர்களே ஒடிடி பக்கம் திரும்பியிருப்பது வரும் காலத்தில் இன்னும் பெரிய நடிகர்களை இதன் பக்கம் திரும்புவதற்கான சூழ்நிலையை உருவாக்குமா?

முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் சூர்யா தனது சூரரைப் போற்று படத்தை ஒடிடிக்கு கொடுக்க வில்லை. பொன்மகள் வந்தாள் படத்தைத்தான் கொடுத்திருக்கிறார். இன்று இந்தப் படம் பெருவாரியான மக்களிடையே எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

image

ஒரு வேளை இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் சூர்யா ஒடிடிக்கு விற்பனை செய்த பணத்தை விட மிகக் குறைவான பணத்தையே வசூல் செய்திருக்கும். ஆகவே இதை முன்பே கணித்த அவர்கள் ஒடிடிக்கு படத்தை விற்றிருக்கலாம்.

image

இன்னொன்று பெரிய நடிகர்களின் பலமே திரையரங்குகள்தான். அங்கு அவர்கள் ரசிகர்கள் செய்யும் கொண்டாட்டங்கள்தான் திரைத்துறையில் அவரது இமேஜை தூக்கி நிறுத்தும். அப்படியானால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் எப்பொழுதோ ஒடிடியில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் வெளியாக வில்லை. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒடிடியில் கிடைக்கும் லாபமானது திரையரங்குகள் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஐந்தில் ஒரு பங்குதான். ஆகையால் நிச்சயம் பெரிய நடிகர்களின் கண்பார்வை ஒடிடியின் பக்கம் நிச்சயமாகத் திரும்பாது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement