கொரோனா வைரஸ் காரணமாக 4 ஆம் கட்ட பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மாநில முதல்வர்களின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு மார்ச் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3- ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நடைமுறையிலிருந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்று நோய்களின் ஹாட் ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
எனவே இந்தக் குறிப்பிடப்பட்ட நகரங்களில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் நீடிக்கப்படுவது குறித்து வரும் 31 ஆ ம்தேதி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாநில முதல்வர்களின் கருத்தை அமித்ஷா கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Loading More post
"ஏன் அழுகுறீங்க" - இங்கிலாந்தை மறைமுகமாக கலாயத்த நாதன் லயான்!
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி