JUST IN

Advertisement

“பயப்பட வேண்டாம் நாம் பயிர்கள் அல்ல” - வெட்டுக்கிளி சர்ச்சையில் சஞ்சை மஞ்ரேக்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெட்டுக்கிளி படையெடுப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சை மஞ்ரேக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


Advertisement

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சை மஞ்ச்ரேக்கர். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பெற்று வருகிறார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்து, கிரிக்கெட் ரசிகர்களின் சாடலுக்கு உள்ளானார்.

image


Advertisement

இந்நிலையில் தற்போது இந்தியாவின் சில மாநில விவசாயிகளின் பிரச்னையாக உள்ள வெட்டுக்கிளிகள் படையெடுப்புத் தொடர்பாகக் கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.

image

ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த சஞ்சை மஞ்ரேக்கர், “சரி நண்பர்களே, யாரும் பயப்படும் வேண்டாம். நாம் பயிர்கள் அல்ல” எனத் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்திற்கு ஏராளமான நெட்டிசன்கள் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர். பயிர்களை நம்பித்தான் நாம் இருக்கிறோம், இந்தப் பதிவை நீக்குங்கள், மூன்றாம் தர நகைச்சுவை என எதிரான கருத்தைப் பதிவிட்டுள்ளனர்.


Advertisement

செங்கல்பட்டில் இன்று 45 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement