JUST IN

Advertisement

"ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு சோகமான சாதனை" - ட்ரம்ப் வேதனை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.


Advertisement

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.

image


Advertisement

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Advertisement

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சமயத்தில் பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement