சென்னையில் ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா உறுதி 

Corona-has-been-confirmed-for-1253-returning-Tamil-Nadu-from-Maharashtra
சென்னையில் இன்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 827  பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.
 
Image 
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 145 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும்  பிளாஸ்மா சிகிச்சை மூலம் 7 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 
 
Image 
 
சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது.   இதனிடையே சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் பயணித்த 56 பேரில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  அந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மீதமுள்ள 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இதனிடையே மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பிய 1253 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement