செங்கல்பட்டில் இன்று 45 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

45-Coronavirus-positive-case-in-Chengalpattu-today---What-about-other-districts-

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 827 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.

image

செங்கல்பட்டு - 45, கடலூர் - 4, திண்டுக்கல் - 4, கள்ளக்குறிச்சி - 3, காஞ்சிபுரம் - 20, கிருஷ்ணகிரி - 1, மதுரை - 8, நாகை - 2, புதுக்கோட்டை - 1, ராணிப்பேட்டை - 1, சேலம் - 39, தஞ்சை - 1, திருவள்ளூர் - 38, திருவண்ணாமலை - 40, தூத்துக்குடி - 4, நெல்லை - 29, வேலூர் - 2, விழுப்புரம் - 3, விருதுநகர் - 3 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இதுதவிர ரயில்வே தனிமை வார்டில் இருந்த 16 மற்றும் விமான நிலைய தனிமை வார்டில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


Advertisement

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 8,676 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 145 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத் அரசின் கொரோனா நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement