JUST IN

Advertisement

கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் 13 இடங்களில் சதமடித்த வெயில் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று வெயில் 13 இடங்களில் சதமடித்து உள்ளது. மேலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிந்துள்ளது.


Advertisement

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் -ஐ தாண்டி பதிவாகியுள்ளது.

image


Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாகத் திருத்தணியில் 108.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

image

இதற்கு அடுத்தபடியாக வேலூர் 106.8, திருச்சி 104.7, மதுரை விமான நிலையம் 104, கரூர் பரமத்தி 103.6, கடலூர் 103.2, நாமக்கல் 103.1, சேலம் 102.7, பரங்கிப்பேட்டை 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.6, புதுச்சேரி 101.3, மதுரை 101.1, பாளையங்கோட்டை 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement