பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2-ல் வெலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் நெட்வொர்க் நிறுவனங்களிடையே ஆஃபர்கள் வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு புதிய பிளான்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிளான் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, ரூ.2-ல் வெலிடிட்டி கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2-க்கு பிளானை தேர்வு செய்தால், ஒருவரின் வெலிடிட்டி காலம் முடிவடைந்த பின்னர், மேலும் மூன்று நாட்கள் வெலிடிட்டி நீட்டிப்பு வழங்கப்படும். அதற்கான ரூ.2 தொகை வெலிடிட்டி தொடங்கிய முதல் நாளில் வாடிக்கையாளர்களின் மெயின் பேலன்ஸில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த பிளான் வெலிடிட்டிக்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய மட்டும் என்றும், இதில் வேறு எந்த சலுகைகளும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னதாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.19 பிளானுக்கு பதிலாக இந்த புதிய பிளான் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரூ.19 பிளானின்படி, ஒரு மாதத்திற்கு வெலிடிட்டி நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?