JUST IN

Advertisement

திருப்போரூர்: வடமாநில இளைஞரின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் உயிரிழந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

அதிகாரிகளுக்கு கொரோனா - சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் மூடல்


Advertisement

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நஜ்மல் (வயது 25). இவர் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள  ஒரு தனியார் தொழிற்சாலையில் உதவியாளராக  பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 தினங்களாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நஜ்மல் திடிரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நஜ்மலின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தமிழகத்தில் இருந்து அஸ்ஸாமிற்கு சடலத்தைக் கொண்டு வர தங்களிடம் வசதியில்லை எனவும், ஆகவே நஜ்மலின் உடலை  அங்கேயே அடக்கம் செய்துவிடுங்கள் என கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து  அவருடன் பணியாற்றிய நபர்கள் நஜ்மலின் சடலத்தை புதைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் செங்கல்பட்டு அருகே உள்ள தொழுநோயாளிகள் குடியிருப்பு பகுதியான பெத்தேல்நகர் சுடுகாட்டில் சடலத்தை புதைப்பதற்காக  மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.

சென்னை: ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு


Advertisement

image

திருமணிப் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சடலத்துடன் ஆம்புலன்ஸ் வந்ததை கண்ட ஊர்மக்கள் கொரோனா பாதிப்பால் இறந்த நபரை புதைக்கிறார்கள் என சந்தேகித்து ஆம்புலன்ஸை மறித்து  பிரச்னையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயராம் ஆகியோர் சமரசம் பேசி சடலத்தை புதைக்க முயற்சித்தும்  ஊர்மக்கள் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் காவலர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சடலம் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பப்பட்டது. அதன்பிறகு நள்ளிரவு செங்கல்பட்டுப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் சடலம் புதைக்கப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement