JUST IN

Advertisement

ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை - செங்கோட்டையன் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீதும், பொதுமுடக்க காலத்தில் கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து, ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத்தான் தடை என விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement