தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் தேர்வு ஜூன் 25 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், தேர்வு மையங்கள் எங்கு அமையும் என்பது குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் 10-ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீதும், பொதுமுடக்க காலத்தில் கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!