மருத்துவப் பாதுகாப்புடன் கிரிக்கெட்டா ? முரண்படும் ராகுல் டிராவிட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு கிரிக்கெட் முறைக்கு ராகுல் டிராவிட் முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.


Advertisement

உலக அளவில் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல கிரிக்கெட் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் வீரர்கள் தனித்தனியே பயிற்சி எடுப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளன. இந்நிலையில் மருத்துவப் பாதுகாப்புடன், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடும் புதிய நடைமுறையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

image


Advertisement

இந்த முறையைக்கொண்டு பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடரை விளையாடப் போவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த நடைமுறைக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இப்படி ஒருமுறையை பின்பற்றி, நிர்வகித்தாலும் அது சாத்தியப்படாது என்று அவர் கூறியுள்ளார்.

ஏனென்றால் ஒரு தொடரில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் முதல்நாள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விளையாடும் ஒரு வீரருக்கு, 2வது நாள் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், ரசிகர்களின் உற்சாகத்திலும் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக, ரசிகர்கள் இல்லாத மைதானத்தை ரசிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement