வொயர் இல்லாத இயர்போன்ஸ் : ரெட்மி வெளியீடு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வொயர் கனெக்‌ஷன் இல்லாமல் காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போனை (அல்லது இயர்பட்ஸ்) ரெட்மி நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.


Advertisement

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோமி உருவெடுத்து வருகிறது. இதற்கு காரணம் குறைந்த விலையில், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பது அந்நிறுவனம் தான் என வாடிக்கையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜியோமி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்மி மாடலில் புதிய வொயர் இல்லாத காதில் மாட்டக்கூடிய இயர்பட்ஸை வெளியிட்டுள்ளது.

image


Advertisement

இந்த இயர்பட்ஸின் விலை ரூ.1,799 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இயர்பட்ஸுகள் வழங்கப்படும் நிலையில், ஒன்றின் எடை 4.1 கிராம் ஆகும். ஒவ்வொரு இயர்பட்ஸுக்கும் தனியே 43 எம்ஏஹெச் திறன்கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 300 எம்ஏஹெச் பேட்டரி ஒன்று உள்ளது. இதனை 1.30 மணி நேரம் ஜார்ஜ் செய்தால், 12 மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். அத்துடன் 4 மணி நேரம் போன் பேச முடியும். ஜார்ஜ் போட்ட பின்னர் உபயோகிக்காமல் இருந்தால் 150 மணி நேரம் வரை ஜார்ஜ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

இந்த இயர்பட்ஸ் மூலம் போன்கால்களை ஏற்கலாம், தவிர்க்கலாம். அத்துடன் பாடல்களை இயக்கலாம், மாற்றிக்கொள்ளலாம். ஆனால் பாடலின் சத்தத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது எனப்பட்டுள்ளது. அதேசமயம், கூகுள் அஸிஸ்டன் உள்ளிட்டவற்றை இயக்கலாம்.


Advertisement

பொதுமுடக்க எதிரொலி : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஊபர்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement