திருச்சி: மல்லிகை பூ தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - 14 வயது சிறுவன் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மணப்பாறை அருகே மல்லிகை பூ தோட்டத்தில் கல்லால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்துடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் மேல்பாகத்தை சேர்ந்தவர் ராஜாங்கம்(கட்டட தொழிலாளி). இவரது மனைவி லலிதா. இந்த தம்பதியினரின் மூன்றாவது மகள் (வயது 9) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பொது முடக்கத்தால் வேலையில்லாமல் வீட்டில் இருந்த பெற்றோர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வால் தந்தை வெளியூர் வேலைக்கும், தாய் கூலி வேலைக்கும் சென்றுள்ளனர்.


Advertisement

மாமியார் வீட்டிற்கு சென்ற சிஏஜி ...

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் அருகே உள்ள நாகராஜ் என்பரின் மல்லிகை பூ தோட்டத்தில் இருந்து இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் பரிசோதனையில் மண்டை ஓடு உடையும் வகையில் சிறுமியின் தலையின் பின்புறம் கல்லால் பலமாக தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல் ஹக், துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்தக்கறை படிந்த சட்டை, பேண்ட் ஆகியவற்றை வைத்து சிறுமியின் அண்ணன் முறையில் உள்ள 14 வயது சிறுவனை காவல் நிலையம் அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.


Advertisement

பெண்களை கொலை செய்து சடலத்துடன் ...

விசாரணையில் சிறுவன் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து விட்டு சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததும், அப்போது சிறுமி சத்தம் போட்டதால் கல்லால் தாக்கி சிறுவன் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. சிறுவன் மீது கொலை வழக்கு, மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement