JUST IN

Advertisement

"டி20 போட்டிகளுக்கு ரோகித்தை கேப்டனாக்கலாம்" அதுல் வாசன் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் யோசனை தெரிவித்துள்ளார்.


Advertisement

ஸ்பேர்ட்ஸ்கீட் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அதுல் வாசன் " இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் தேவை என நினைக்கிறேன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒருவரே கேப்டனாக இருப்பது சுமையை அதிகரிக்கும்.ஆனால் விராட் கோலிக்கு இந்தச் சுமை பிடித்திருக்கிறது என நினைக்கிறேன்" என்றார்.

image


Advertisement

மேலும் இது குறித்து கூறிய வாசன் "ரோகித் சர்மா பலமுறை தானும் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 கோப்பைகளையும் வென்றுள்ளார். ஒரு தலைவரான அணியை சரியான முறையிலும் வழி நடத்துகிறார் என்றே நனைக்கிறேன். எனவே கேப்டன் பொறுப்பை கோலிக்கும் ரோகித்துக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்"

image

கேப்டன்சி குறித்து பேசிய வாசன் "இந்திய ஒருநாள் அணிக்கும் டெஸ்ட் அணிக்கும் கோலியே கேப்டனாக தொடர வேண்டும். அவர் அதில் மிகச் சிறப்பாகவே செயல்படுகிறார். அதில் அவர் ஒரு பாஸ். ஆனால் டி20 போட்டிகளுக்கு மட்டும் ரோகித்தை கேப்டனாக்க வேண்டும். இது கோலி மீதான சுமையை குறைக்கும். டி20 கோப்பைகளையும் நாம் வெல்லலாம்" என்றார் அவர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement