JUST IN

Advertisement

ஒத்திவைக்கப்படும் டி20 உலகக் கோப்பை ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டி20 உலகக் கோப்பை தள்ளிப்போவது தொடர்பாக வரும் மே 28ஆம் தேதி நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளும் அடக்கம். இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டிகளும் ஒத்திவைக்கப்படலாம் எனப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டிலும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதனால் அங்கு செப்டம்பர் மாதம் வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை நடத்துவதற்கு வாய்ப்பு குறைவு தான். ஏனென்றால் 16 நாடுகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் வரவேண்டும். அதற்கு அனைத்து நாடுகளின் அனுமதி மற்றும் ஆஸ்திரேலிய அரசின் அனுமதி தேவை. இது சாத்தியப்படுவது சந்தேகம் என்பதால், டி20 உலகக் கோப்பை தள்ளிப்போகும் எனப்படுகிறது.

சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனோ உறுதி

இதுதொடர்பாக வரும் 28ஆம் தேதி ஐசிசி தரப்பில் இருந்து காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை தள்ளிவைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும், பின்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement