JUST IN

Advertisement

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தற்போது 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 31ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது பேருந்து வசதிகள் அனுமதிக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 image


Advertisement

இந்நிலையில் கொரோனா தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அரசு நியமித்த இந்த மருத்துவக்குழு மாநிலத்தில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்குமென தெரிகிறது. மே 31ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement