JUST IN

Advertisement

“மக்கள் பாராட்டும் அளவுக்கு தேமுதிக சேவை செய்கிறது” - பிரேமலதா விஜயகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மக்கள் பாராட்டும் அளவுக்கு தேமுதிக சேவைப் பணிகளைச் செய்து வருவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


Advertisement

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஊர் ஊராக தேமுதிக நிர்வாகிகள் பொது முடக்கக் காலத்தில் சேவைப் பணிகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். மக்கள் பாராட்டும் வகையில் தேமுதிகவின் மக்கள் பணி இருப்பதாகக் குறிப்பிட்டார்.


Advertisement

தமிழக மக்கள் அனைவருக்கும் அது நன்றாகத் தெரியும் என்றும், சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய இடம் கிடைக்காத போது முதல் நபராகக் குரல் கொடுத்தது விஜயகாந்த் தான் என்று தெரிவித்தார். இந்தக் கொரோனாவில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டு வந்து, தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாகும் என்றும் அவர் கூறினார்.

ஏழ்மையில் ஆட்டோ ஓட்டுநர் : ரமலானுக்காக உண்டியல் பணத்தைக் கொடுத்த மாணவி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement