[X] Close

கோலி தாடியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன் : ’நச்’ என்று கலாய்த்த விராட்

Subscribe
Virat-Kohli-Trolls-Kevin-Pietersen-For--Shave-Your-Beard-Off--Comment-On-Throwback-Picture

இன்ஸ்டாகிராமில் தன்னை கிண்டல் செய்த கெவின் பீட்டர்ஸனுக்கு விராட் கோலி நகைச்சுவை பதிலளித்துள்ளார்.


Advertisement

கொரோனா பொது முடக்கத்தால் இந்தியாவே கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த 2 மாத காலங்களாக சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது முடி மற்றும் தாடியைத் திருத்திக்கொள்ள முடியவில்லை.

image


Advertisement

அந்த வகையில் விராட் கோலி தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், “நாம் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். இந்த நேரத்தில் மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். எனக்குத் தாடி நன்றாக வளரக்கூடியது. எனவே அதை வீட்டிலேயே ட்ரிம் செய்துகொள்ள நினைத்தேன். இதுதான் எனது புதிய தோற்றம்” எனத் தெரிவித்திருந்தார்.

image

இதற்கு கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன், “இப்போது உங்கள் தாடியின் நரை போய்விட்டதா ? நீங்கள் ஷேவ் செய்துகொள்ளுங்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்திருந்த விராட் கோலி, “உங்கள் டிக்டாக் வீடியோவை விட இது மேல்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்திற்கு இடையே கிரிக்கெட் ரசிகர்கள் பல கருத்துகளைக் கூறிவருகின்றனர்.


Advertisement

செங்கல்பட்டில் இன்று 46 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close