புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமலாக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கை சில தளர்வுகளுடன் செயல்படுத்தலாம் என்றும் இது சம்பந்தமான முடிவுகளை மாநில அரசுகளே சூழ்நிலைகளுக்குகேற்ப எடுக்கலாம் என்றும் தெரிவித்தது. அந்தத் தளர்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மதுபானக்கடைகளை திறந்தன.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது “புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்க புதுச்சேரிக்கு வரக்கூடாது. மதுபானம் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் மதுபானம் வாங்க வேண்டும். மேலும் மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும்” என அவர் கூறினார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ