புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு ரயிலிலேயே பிரசவம் பார்த்த டாக்டர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் ரயிலிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பொதுமுடக்கத்தால் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால் அவர்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.

இதனிடையே மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப “ஷராமிக்” என்ற பெயரில் சிறப்பு ரயில்களை மே 1 ஆம் தேதியிலிருந்து இயக்கி வருகிறது. இதில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.


Advertisement

image

இந்நிலையில் புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் குஜராத்திலிருந்து அவரது சொந்த ஊரான பீகாருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகி்றது. ஆனால் சிறப்பு ரயிலானது முக்கிய நகரங்களில் மட்டுமே நிறுத்தப்படும் என்பதால் ரயிலை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

இதனையடுத்து இது குறித்த தகவல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ரயிலில் இருந்த டாக்டர் புல்கிதா, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இது குறித்து ரயில்வே துறை அதனது ட்விட்டர் பக்கத்தில் “தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்” என்று பதிவிட்டதுடன் குழந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.


Advertisement

image

மேலும் ரயில்வே துறை பாதுகாப்பு துறை அதிகாரி அருண் குமார் கூறும் போது “கடந்த மே 1 ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயிலில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தை பிறந்தவுடன் தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்குத் தேவையான அடுத்தக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement