இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,31,868 ஆக உயர்வு - இரண்டாவது இடத்தில் தமிழகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,767 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101லிருந்து 1,31,868ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51,784லிருந்து 54,441ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் 41.4 சதவீதமாக முன்னேறியுள்ளது.

image


Advertisement

கோரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720லிருந்து 3,867 ஆக அதிகரித்துள்ளது. 73,560 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,190ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,577 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

India sees biggest spike in COVID-19 with 6,767 cases

அதையடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 15,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 103 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 13, 664 பேர் பாதிப்பு; 829 பேர் இறப்பு, டெல்லியில் 12,910 பாதிப்பு; 231 இறப்பு, ராஜஸ்தானில் 6742 பாதிப்பு; 160 இறப்பு, மத்திய பிரதேசத்தில் 6371 பாதிப்பு; 281 இறப்பு, உத்தரப்பிரதேசத்தில் 6017 பாதிப்பு; 155 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement