தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா உறுதி 

759-people-infected-with-coronavirus-in-Tamil-Nadu---
 
தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. 
 
Image 
 
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
 
 
Image 
சென்னையில் மட்டும் இன்று 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement