JUST IN

Advertisement

விவசாய கிணற்றில் 9 வெளிமாநில தொழிலாளர்களின் சடலங்கள் மீட்பு - விசாரணை தீவிரம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவிலுள்ள விவசாய கிணறு ஒன்றில் 9 வெளிமாநில தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்


Advertisement

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சணல் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் அவரவர்களுக்கான வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள கிணற்றிலிருந்து 9 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர். மீட்கப்பட்டவர்களின் உடலில் காயம் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

அதனால் தற்போது தற்கொலை வழக்காக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் மகளின் பிறந்தநாள் விழாவுக்காக இவர்கள் ஒன்றுகூடி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிறந்த நாள் விழாவிற்கு பிறகே இவர்கள் அனைவரும் இறந்திருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் இந்த வழக்கில் தெளிவு கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

கைப்பற்றப்பட்ட உடல்களுக்கு தெலங்கானா அரசு இறுதிச்சடங்கு செய்யத் தயாராக இருப்பதாகவும், பீகாரில் அவர்கள் உறவினர்கள் யாராவது கேட்டுக்கொண்டால் உடல் அனுப்பி வைக்கப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஏடிஎம் ரகசிய எண்ணைத் தர மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement