ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு ஹெச்.ராஜா வரவேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

image


Advertisement

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கொரோனாவுக்காக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் கைதுக்கு ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. ” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement