ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் திடீர் மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த சில விநாடிகளில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த அஜிங்க்யா என்ற இளைஞர், அங்குள்ள ஜிம்மில் தரையில் கைகளை ஊன்றி உடற்பயிற்சி மேற்கொண்டார். பயிற்சி மேற்கொண்டபின் எழுந்துநின்ற அவர், மூன்றே விநாடிகளில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடற்பயிற்சி கூடங்களில் ஸ்டீராய்டு ஊசி போடப்படுவதே மாரடைப்பு வர காரணம் என பரவலாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement