JUST IN

Advertisement

"சிறப்பு அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது" - மு.க.ஸ்டாலின் அறிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்களை நியமித்து விட்டால், தன் கடமை முடிந்து விட்டது என்ற மனப்பான்மையில் முதலமைச்சர் செயல்படுகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் அந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும்; ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும் அந்த அறிக்கையில் " அதிகாரிகள், அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயக ரீதியாக, கடமைகளையும் பொறுப்புகளையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும். கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு- அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

image

'ஒரு கை தட்டினால் ஓசை வராது' என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதால், கொரோனா தடுப்பின் தீவிர நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டு - பெருமளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் இந்த நேரத்தில் - மக்களிடம் மிக ஆபத்தான பாதுகாப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தி, நோய்த் தொற்று அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடும் என்பதை முதலமைச்சர் பழனிசாமி உணர்ந்திட வேண்டும்.எனவே ஜனநாயக ரீதியாக, கடமைகளையும் பொறுப்புகளையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement