JUST IN

Advertisement

கணவரைக் காணவில்லை என தேடும் மனைவி : தகனம் செய்த மருத்துவமனை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கணவரைக் காணவில்லை என மனைவி புகாரளித்துள்ள நிலையில், தகனம் செய்துவிட்டோம் என மருத்துவமனை கூறிய சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.


Advertisement

தெலங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு காரணமாகக் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் இரண்டு மகள்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மூன்று பேரும் கடந்த 16ஆம் தேதி சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பினர். ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அப்பெண்ணின் கணவர் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

image


Advertisement

பின்னர் ஏப்ரல் 30ஆம் தேதி அவரும் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் இவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தனது கணவரைக் காணவில்லை என அப்பெண் ட்விட்டரில் தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமா ராவிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாகவும், அவரை மே 1ஆம் தேதி அன்றே தகனம் செய்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நபரின் குடும்பத்தினரிடம் உரியத் தகவல் அளித்துவிட்டதாகவும், அப்பெண் காரணமின்றி மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தனது கணவரின் முகத்தைக் கூட காட்டவில்லை என்றும், உடைமைகளைத் தரவில்லை என்றும் அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தனது கணவர் இன்னும் இறக்கவில்லை என அப்பெண் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சினே சிறந்தவர், அது ஏன் ? - கவுதம் காம்பீர் விளக்கம் !

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement