தமிழகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களை பறித்து சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மதுபாட்டில்கள் புதுச்சேரி பகுதிக்குள் வராமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் திருக்கனூர் பகுதியையொட்டி உள்ள, விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற புதுச்சேரி காவலர்கள் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மதுகுடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறித்து விரட்டி அடித்ததாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு புகார் சென்றது.
இதன் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காவலர்கள் 4 பேரும் தவறாக நடந்து இருப்பதும், மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்து சென்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 காவலர்களையும் சஸ்பெண்டு செய்து சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார்.
கொடைக்கானல் : ஒரு ஏக்கரில் கஞ்சா செடிகள்..! 2 பேர் கைது
இந்த நிலையில் 4 பேர்கள் மீது திருக்கனூர் போலீசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்