தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேற்று 90 கோடியாக குறைந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மீண்டும் தமிழக்த்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதேசமயம் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. இதனால் கடந்த சனிக்கிழமை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது. அப்போது டோக்கன் முறையில் மதுக்கள் விற்பனை செய்யப்பட்டன. சனிக்கிழமை மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை 133.1 கோடிக்கு மது விற்பனை ஆனது. திங்கள் கிழமை 109.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
இந்நிலையில், நேற்று 91.5 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இதுவரை அதிக வசூலில் முதலிடத்தில் இருந்த மதுரையை பின்னுக்கு தள்ளி திருச்சி மண்டலம் நேற்று அதிக வசூல் செய்துள்ளது.
சென்னை மண்டலம் - 6.2 கோடி
திருச்சி மண்டலம் - 23.2 கோடி
மதுரை மண்டலம் - 22.1 கோடி
கோவை மண்டலம் - 19.4 கோடி
சேலம் மண்டலம் - 20.6 கோடி
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்