JUST IN

Advertisement

4.5ல் இருந்து 2: ஸ்டார் மதிப்பீட்டில் பாதாளத்திற்குச் சென்ற டிக்டாக்.. ஏன் தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் ஏராளமானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பலர் பிரபலமடைந்து, அதிலிருந்து திரையுலகு வரை பல்வேறு வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு அடிமைப்பட்டு கிடப்பதாகவும், அநாகரீமாக நடந்துகொள்வதாகவும் இந்தியாவில் ஏராளமான புகார்கள் வந்துள்ளன.


Advertisement

டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பல்வேறு விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பலர் டிக்டாக்கில் விமர்சிக்கப்பட்டு, அதனால் தற்கொலையும் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் சாகச வீடியோக்களை எடுப்பதாக உயிரை இழந்துள்ளனர்.

image


Advertisement

இவ்வாறாக இந்த செயலி மீது நீண்ட நாட்களாக பல விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை ஊக்குவிக்கும் விதமாக டிக்டாக்கில் வீடியோ பதிவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ய வேண்டுமென்று ட்விட்டரில் ஹேஸ்டேக்ஸ் பதியப்பட்டன.

இதற்கிடையே ஹரியானவைச் சேர்ந்த யூடியூப் பிரபலத்திற்கும், மும்பையை சேர்ந்த டிக் டாக் பிரபலத்திற்கும் இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையாக உருவெடுத்தது.

image


Advertisement

இதன் தாக்கம் காரணமாகவும் டிக் டாக் மீது ஒரு தரப்பின ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் ப்ளே ஸ்டோரின்  டிக்டாக்  செயலி ஸ்டார் மதிப்பீடு அதிவேகமாக குறைந்து வருகிறது. 4.5ல் இருந்த மதிப்பீடு தற்போது 2ஆக குறைந்துவிட்டது.

 தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உடனடியாக மீட்க கோரிக்கை

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement