JUST IN

Advertisement

போதையில் தகராறு: நண்பரை கொன்றவர் காவல்நிலையத்தில் சரண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேலூர் அருகே மது அருந்திக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புதுசுக்காம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், பிரபு. நண்பர்களான இவர்கள் நேற்று இரவு சூரக்குண்டு பகுதியில் உள்ள மாத்திக் கண்மாய் பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

அப்போது சிவக்குமார், பிரபு கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதில், பிரபு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து பிரபு தனது தந்தை மனோகரனுடன், மேலூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிரபு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image


Advertisement

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில், கடந்த 20 நாட்களில் மேலூர் பகுதிகளில் நிகழ்ந்துள்ள நான்கு படுகொலை இது என்பதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இறந்த சிவக்குமாரின் உறவினர்கள் கூறும்போது:- ஏற்கெனவே பிரபுவிற்கும் சிவக்குமாருக்கும் முன் பகை இருந்து வந்த நிலையில், நண்பர் மூலம் மது அருந்த அழைத்து வந்து பிரபு படுகொலை செய்ததாகவும் தெரிவித்தனர்..

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement