வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்களால் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் 36ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மே31ம் தேதி வரை நான்காம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகளை அறிவித்துள்ளன. வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்களால் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மொத்தம் இதுவரை 7.4 லட்சம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு வந்துள்ளனர். அவர்களில் 11800 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முடிவு வந்த 8337 பேரில் 651 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்படியானால், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தால் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. பரிசோதனையை வேகப்படுத்த வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் ஜார்க்கண்டிலும் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி