மதுரை மேலூர் பகுதியில் விற்பனையாகும் மதுப்பாட்டில்கள் மிகவும் பழையதாக இருப்பதாக மதுக்குடிப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்
மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் 7 மதுபானக் கடைகளும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 16 கடைகள் என 23 மதுக் கடைகள் உள்ளன. இந்நிலையில் மேலூர் நகர் பகுதியில் கொரோனா பாதிப்பு இருந்ததால் அப்பகுதிகளில் உள்ள 7 மதுபானக் கடைகளும் கடந்த 16 ம் தேதி திறக்கப்படவில்லை.
இதனால் நகர் பகுதியில் உள்ள மதுக்குடிப்போர் அருகில் கிராம பகுதிகளில் திறக்கப்பட்ட மதுபான கடைகளை நாடிச் சென்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.இந்நிலையில் மேலூர் நகர் பகுதிகளில் 7 மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.
கடந்த 50 நாட்களுக்கு பிறகு இப்பகுதியில் மதுபானக் கடை திறக்கப்பட்டாலும், போதிய மதுகுடிப்போர் இல்லாமல், கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும் இன்று திறக்கப்பட்ட பெரும்பான்மையான மதுபான கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் மிகவும் பழையதாகவும், லேபில், மற்றும் தயாரிப்பு தேதிகள் ஆகியவை அழிந்தும் உள்ளதாக மதுக்குடிப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.
“ரூ.20 லட்சம் கோடி..! இல்லை வெறும் ரூ.1,86,650 கோடி தான்..” - ப.சிதம்பரம்
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்