டாஸ்மாக் கடைகளில் இரவு 7 மணிவரை மதுவிற்பனை - தமிழக அரசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையை மேலும் 2 மணி நேரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.

பொதுநல மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை ...


Advertisement

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. இதனால் நேற்று முன் தினம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது. அப்போது டோக்கன் முறையில் மதுக்கள் விற்பனை செய்யப்பட்டன.

பொருளியலுக்குப் புத்துயிர்: தமிழக ...

மதுபானங்கள் விற்பனை செய்யும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 2 மணி நேரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக்கை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement