கணவரைவிட்டு வேறு ஆணுடன் சென்றவரை உறவினர்களே படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆயம்மாள். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த விமல் என்பவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடந்த இரண்டு வருடமாக ஆயம்மாளும், விமலும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த அன்பு நாதன் என்பவருக்கும் ஆயம்மாளுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடியதாக சொல்லப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அவரது உறவினர்கள், இந்த ஜோடி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு, அவர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி இருசக்கர வாகனத்தில் மேலூருக்கு அழைத்து வந்துள்ளனர்.
வாகனம் ஆண்டிபட்டி அருகே உள்ள நல்லான்பெத்தான் கண்மாய் சாலைக்கு வந்து கொண்டிருந்த போது, வாகனத்தை நிறுத்திய உறவினர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆயம்மாளையும், அன்புநாதனையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் வாள் கொண்டு வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா, கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்தப் படுகொலை தொடர்பாக மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வனிதாவிடம் கூறும் போது, “குடும்பப் பிரச்சினை காரணமாகப் படுகொலை நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாகச் சார்பு ஆய்வாளர்கள் இருவர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?