தருமபுரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இன்று தருமபுரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.


Advertisement

தமிழகத்தில் உம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை வடத் தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகபட்சமாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Advertisement

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று பிற்பகலில் அரூர் தென்கரை கோட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கோவையிலும் மழை பெய்து வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement