குழந்தை பெற்ற சில நாட்களில் பெண் உயிரிழப்பு : நேபாளில் முதல் கொரோனா பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நேபாளம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

சீனாவில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் உலகின் 188 நாடுகளைப் பாதித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் பாதிப்பு குறைவாக இருந்து வருகிறது. அங்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

அங்குக் கடந்த 8ஆம் தேதி கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றுள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தடுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைந்த தொழிலாளர்கள் - வைரல் வீடியோ

நேபாளத்தில் இதுவரை 281 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 பேர் சிகிச்சைப் பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். அங்குக் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாளை வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement