JUST IN

Advertisement

"தோனி சரியான முடிவை எடுப்பார்" மேத்யூ ஹைடன் கருத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சரியான முடிவை எடுப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

மேத்யூ ஹைடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடியுள்ளார். அதன்பின்னரும் தோனியுடன் நட்புடன் இருந்து வருகிறார்.

இதனிடையே ஐபிஎல் போட்டிகளில் தோனியின் செயல்திறனை பொறுத்தே இந்திய அணியில் அவர் மீண்டும் விளையாடுவது முடிவு செய்யப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி ஏற்கெனவே கூறியிருந்தார். இருப்பினும், ஐ.பி.எல் குறித்து எந்தவிதமான உறுதியும் இல்லாத நிலையில், இந்திய அணிக்கு தோனி திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கருதப்படுகிறது.


Advertisement

மேத்யூ ஹைடன் - எம்எஸ் டோனி

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தோனியின் ரிட்டையர்மெண்ட் குறித்து பேசியுள்ளார். அதில், “தனிப்பட்ட நண்பராக தோனியின் கேரியர் குறித்து கருத்து தெரிவிப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு சாம்பியனையும் நான் நினைக்கிறேன். எம்.எஸ் தோனியை ஒரு சாம்பியனாக நான் கருதுகிறேன். தங்களை விளையாட்டிலிருந்து வெளியேற்றிக்கொள்ள போதுமான நேரம் எப்போது என்பது அவர்களுக்கு தெரியும். நேரம் நெருங்கும்போது எதிர்காலம் குறித்த முடிவை அடைய வேண்டிய கட்டாய உணர்வுக்கு தள்ளக்கூடாது. தோனி தனக்கான சிறந்த முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement